உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை



மதுரை தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில் இன்று சமா தான் திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கலெக்டர் சங்கீதா, வணிக வரித்துறை ஆணை யாளர் ஜெகன் நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல் சங்கர், கவுரவ செயலாளர் சாய்…



மேலும் படிக்க…

நம்ம மதுரையில் டோக்கியோவை மிஞ்சும் ஹெல்த் வாக் டிராக்! நவ.4ம் தேதி திறந்து வைக்கும் தமிழக முதல்வர்!

​அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஐடியா:உடல் நலத்திலும், உடற்பயிற்சியிலும் அதிக ஆர்வம் காட்டும் நமது சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒருமுறை ஜப்பான் சென்றிருந்தபோது அங்கிருக்கும் ஹெல்த் வாக் டிராக்கை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு இந்த ஐடியா தோன்றியுள்ளது. அதாவது நமது தமிழகத்திலும் இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார்.​தமிழகத்தில் மதுரைக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/cm-mk-stalin-will-inaugurate-the-first-health-walk-track-of-tamilnadu-on-4th-november-in-madurai/amp_articleshow/104847658.cms

திருச்சி வழியாக சென்னை செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம் – trichyvision

திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்….. சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பணிமனை, வேளச்சேரி மற்றும் விஜயவாடா ரெயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில் வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. 

அதன்படி வண்டி எண் : 12606 காரைக்குடி – சென்னை பல்லவன் அதிவிரைவு விரைவு ரெயில் காரைக்குடியில் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Change-in-train-service-to-Chennai-via-Trichy

வலங்கைமானில் பட்டாசுகள் வெடித்து திடீர் தீ விபத்து!

வலங்கைமானில் பட்டாசுகள் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நீடாமங்கலம்: வலங்கைமான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் தனது வீட்டின் முன்புறத்தில் பட்டாசுக் கடை வைத்துள்ளார். கடையில் பட்டாசுகளை இருப்பு வைத்து  பட்டாசு விற்பனை செய்து வருகிறார். வீட்டின் பின்புறத்தில் தனியாக ஒரு இடத்தில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/tamilnadu/2023/oct/31/a-fire-broke-out-in-valangaiman-firecracker-shop-4098418.amp

சம்பா பருவ நெல் சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் – விவசாயிகள் வலியுறுத்தல் | Tirupur News: Release of water from Amaravati dam for Samba season paddy cultivation

உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையிலிருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்த நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இதனால் …
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tirupur-news-release-of-water-from-amaravati-dam-for-samba-season-paddy-cultivation-farmers-insist-680133

தேவர் ஜெயந்தி குருபூஜை விழா | Madurai News Devar Jayanti Guru Puja Festival

வாடிப்பட்டிமதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டியில் பிரமலைக்கள்ளர்நலசங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா- குருபூஜை விழா நடந்தது.சங்கதலைவர் தங்க மலைச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந் திரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி முத்துராமன், அ.தி.மு.க.பேரூர் செயலாளர் அசோக்குமார், மாநகராட்சி அதிகாரி பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/madurai-news-devar-jayanti-guru-puja-festival-680093

பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் – விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள்

உடுமலை: ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பாண்டில் தமிழக பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலைத்துறை வாயிலாக நீர் பாசனத்தில் புதிய திட்ட உத்திகளை செலுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கி உதவும் புதிய பயிர்கள் மற்றும் ரகங்கள் அறிமுகம் செய்து வேளாண்மையை நவீனப்படுத்தி கொண்டுள்ளது.இத்திட்டத்தில் ஆழியாறு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tirupur-news-irrigated-agriculture-modernization-projectfarmers-are-requested-to-benefit-680157

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு! 

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 2222 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு 07.01.2024 அன்று நடைபெறவுள்ளது எனவும் இத்தேர்வுக்கு இணையதள (http//www.trbtn.gov.in) முகவரி வாயிலாக 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம்…
மேலும் படிக்க…

Source: https://www.covaichronicle.com/english/contentview/smk-1-31-10-23

வெள்ளலூர் குப்பைக்கிடங்கால் அலறுகிறது சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் ! ‘கெமிக்கல் ஸ்பிரே’ கை கொடுக்குமா?

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் நாளுக்கு நாள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருவதால் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் திணறும் அவல நிலை உருவாகியுள்ளது.
கோவையில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வெள்ளலூர் குப்பைக்கிடங்கு. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://www.covaichronicle.com/english/contentview/vellalore-dump-yard-is-a-nasty-hell

Lokal App | திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது….
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/tiruchirappalli/increased-security-at-trichy-airport-11859261