கடவுள் சக்தி அம்பலம் அய்ம்பொன் கடவுள் சிலை திருட்டு தஞ்சாவூர், ஆக. 11- தஞ்சாவூர் அருகே 12 ஆண்டு களாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் அய்ம்பொன் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழைமையான சிலையை கடத்திச் செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் 9.8.2024 அன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில், கார் ஒன்றும், இரண்டு இருசக்கர வாகனங்களும் சந்தேகத்திற்கிடமாக நின்றுக் கொண்டு இருந்தன. இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, சென்னை, அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை சேர்ந்த ராஜேந்திரன்( 52), தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே அலமங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார் (36), திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ்(28) ஜெய்சங்கர்(58), கடலுார் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த விஜய்(28) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணையில், இனாம்கிளியூரை சேர்ந்த தினேசின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலை கிடைத்துள்ளது. இது குறித்து வருவாய் துறையினரிடம் தகவல் அளிக்காமல், தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார். இதையடுத்து தினேஷ் அவரது தந்தைக்கு பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்து இருந்த சிலையை கண்டெடுத்தார். அவரும், வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல், சிலையை, இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என முயன்றுள்ளார். இதில் தனது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். பிறகு தினேஷ் தனது நண்பர் களான ராஜ்குமார், ஜெய்சங்கர், விஜய் ஆகியோர் மூலம் சென்னைக்கு கடத்தி செல்ல, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரை சேர்ந்த ஹாரிஸ், (26) காட்டுமன்னார்குடி அருகே கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், (26) ஆகியோரைப் பாதுகாப்புக்கு அழைத்துக் கொண்டு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரும் கைது செய்யப்பட்டு சிலையை பறிமுதல் செய்து, கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சிலையானது 15 முதல் 16ஆம் நுாற்றாண்டு சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. தடை செய்யப்படுமா இந்த அபாய செயல்? தலையில் தேங்காய் உடைத்து வழிபாடாம் நெய்க்காரப்பட்டி, ஆக. 11- பழநி பெரிய கலையம் புத்துார் மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இக்கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு கோயில் ஆபரண பெட்டிகள் சண்முக நதிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின் ஆபரண பெட்டிகள் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் கம்பத்தில் தீபம் ஏற்ற தலா எட்டு ஆண்கள், பெண்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர், ஆக. 11- தஞ்சாவூர் அருகே 12 ஆண்டு களாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் அய்ம்பொன் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழைமையான சிலையை கடத்திச் செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/81117/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D/